சில்லறை வியாபாரிகளுக்கு DECOY EFFECT யை உபயோகித்து பல வழிகளில் பயன் பெறலாம். இந்த உளவியல் உண்மையை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்துவது என்று உதாரணத்தோடு பார்ப்போம்.

SMALL, LARGE என இரண்டு  வகையான French Fries 🍟 ஒரு உணவகத்தில் விற்கப்படுகின்றது என வைத்துக்கொள்வோம். அதன் விலை முறையே 300.00  ரூபா, 800.00 ரூபா வாகும். இச்சந்தர்ப்பத்தில், அதிகம் இலாபத்தை ஈட்டித்தரக்கூடிய LARGE  SIZE யை இந்த உணவகம் ஊக்கப்படுத்த விரும்புகின்றது.

எனவே, 700.00 ரூபா கொண்ட MEDIUM SIZE ஒன்றை உணவகம் அறிமுகம் செய்கின்றது. LARGE SIZE, MEDIUM SIZE யை விட பெரியது. என்றாலும் அதன் விலை கணிசமான அளவு அதிகமாகவும் உள்ளது.

வாடிக்கையாளர்கள் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, தெரிவு செய்வதற்கு மூன்று வகையான அளவுகள் முறையே 300.00 ரூபா, 700.00 ரூபா மற்றும் 800.00 ரூபா விற்கு இருக்கின்றன. LARGE SIZE யை சாமர்த்தியமாக வைத்ததனால், LARGE SIZE வாடிக்கைளார்களுக்கு விலைக்கு பொருத்தமானதாக தோனும்.

இச்சந்தர்ப்பத்தில், DECOY EFFECT கணக்கச்சிதமாக தொழிற்படுகின்றது. இரண்டிட்கும் இடைப்பட்டதொன்றை அறிமுகம் செய்வதால், உணவகம் LARGE SIZE யை மிக நியாமான தெரிவாகக் காட்டுகின்றது. SMALL மற்றும் LARGE  SIZE ற்கு இடையில் MEDIUMSIZE  இருப்பதால், விலையையும் அளவையும் வைத்துப் பார்க்கும் போது,  LARGE SIZE விலைக்கேற்ற தெரிவாக வாடிக்கையாளர்கள் உணர்கின்றனர்.

இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் SMALL மற்றும் MEDIUM SIZE யை விட LARGE SIZE யை அதிகமாக தெரிவு செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இது இறுதியில் நல்ல இலாபத்தை காபிக்கடைக்கு ஈட்டித்தரவல்லது.

இந்த உத்தி ஒப்பீடு செய்து முடிவை வேகமாக எடுக்க வைக்கின்றது. விலைகளையும் தெரிவுகளையும் இப்படி சில்லறை வியாபாரிகள் மாற்றி அமைப்பதனால் விருப்பமான தெரிவை எடுக்க வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்ட முடியும். இதனால் இலாபம் அதிகமாக உள்ள பொருட்கள் கொள்வனவு செய்யப்படுதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் சுலபமாக முடிவெடுக்க வைக்கும் விதமாக இந்த உத்தி சாமர்த்தியமாக போடப்பட்டிருக்கின்றதா என உறுதிசெய்வதோடு, சில்லறை வியாபாரிகள் கவனமாக விலையையும் பொருட்களின் offering களையும் வடிவமைக்க வேண்டும்.