நறுமணத்தின் செல்வாக்கு என்பது வாடிக்கையாளர்களின் அனுவத்தையும் நடவடிக்கையும் நறுமணம் எந்தளவு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதாகும். எமது வாசனை உணர்வு, எங்களது உணர்வுகளோடும் நினைவுகளோடும் பின்னிப்பிணைந்துள்ளது. குறித்த நறுமணங்கள் நேர்மறையான உணர்வுகளையும், சௌகரிய உணர்வையும் உருவாக்க வல்லன. அத்தோடு உடனடியாக கொள்வனவு செய்ய வைக்கும். இந்த கருப்பொருளை தெளிவு படுத்த ஓர் உதாரணத்தை தருகின்றோம்

ஓர் BAKERY குள்ளே செல்வதாக கற்பனை பண்ணுங்கள். உள்ளே நுழையும் போதே, சுடச்சுட போடப்பட்ட பாண் மற்றும் இனிப்புப் பண்டங்களின் இதமான வாடை அப்படியே காற்றில் மிதந்து வந்து உங்கள் மூக்கை துளைக்கும். இந்த வாடை அடுத்த கணமே உங்கள் புலன்களுக்கு உயிர் கொடுத்து, பசி உணர்வை ஏற்படுத்தும். நீண்ட நேரம் அங்கே நிற்பதற்கும், பொருட்களை பார்ப்பதற்கும், இறுதியில் வாங்குவதற்கும் ஏற்ற ரம்யமான ஓர் சூழலை இந்த வாடை உண்டு பண்ணுகின்றது.

இந்த தருணத்தில், நறுமணத்தின் செல்வாக்கு தொழிற்படுகின்றது. இந்த சுடச்சுட போடப்பட்ட பொருட்களின் வாடையை சாமர்த்தியமாக பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்தி, சாதகாக நடவடிக்கைக்கு செல்வாக்கு செலுத்துகின்றது. இந்த நறுமணம் உணர்வையும், ஆசையையும் தூண்டி, ஆரம்பத்தில் வாங்குவதற்கு உத்தேசிக்காத பல பொருட்களை வாங்குவதற்கான வாய்புக்களை அதிகரிக்கின்றது.

பல துறைகளில் இருக்கும் சில்லறை வியாபாரிகள் இந்த நறுமணத்தின் செல்வாக்கை புரிந்து வைத்திருப்பதோடு, அவர்களுக்கு சாதகமாக அதை பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, அதி நவீன துணிக்கடையொன்றுக்கு தனது கடை முழுக்க இமதான வாடை வீசும் விதமாக ரம்யமான ஓர் சூழலை உருவாக்க முடியும். SPA அல்லது WELLNESS STORY  ற்கு, மன அமைதியையும் நிம்மதியையும் உண்டுபண்ணும் விதமாக, LAVENDER அல்லது EUCALYPTUS    போன்ற நறுமணத்தை பயன்படுத்த முடியும்.

நறுமணத்தின் செல்வாக்கு பௌதீக கடைகளில் மாத்திரமின்றி வேறு இடங்களிலும் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்கள் தான் வாங்கும் பொருட்களில் எதிர்ப்பார்க்கும் விடயங்களை உணர்வுபூர்வமாக தெரிவிப்பதற்காக,ஆன்லைன் வியாபாரிகளும் இணையதள வியாபார தளங்களும் கூட இது போல மனதை கவரும் வார்தைகளை பயன்படுத்தலாம். நறுமண நிறுவனங்களின் ஆதரவுடன், நறுமணம் இடப்பட்ட SAMPLE களை PACKAGING களில் இட்டு ஆன்லைனில் கொள்வனவு செய்யும் போது, அனுப்ப முடியும். இது வாடிக்கையாளர்களை பொருட்களோடு தொடர்பை ஏற்படுத்தும்.

இந்த நறுமண செல்வாக்கை முறையாக கையாள்வதால், சில்லறை வியாபாரிகளினால், வாடிக்கையாளர்களின் நேர்மறையான உணர்வுகளை தூண்டுவதோடு, மறக்கமுடியாத SHOPPING அனுபவத்தையும் கொடுக்க முடியும்.